எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடத்த சிறப்பான ஏற்பாடுகள் - தமிழக அரசு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள், வருகிற 30 ம் தேதி சென்னை - நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் நடத்த சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடத்த சிறப்பான ஏற்பாடுகள் - தமிழக அரசு
Published on
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள், வருகிற 30 ம் தேதி சென்னை நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் நடத்த சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும், எம்ஜிஆர் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு, நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com