மம்தாவுக்கு என்னாச்சு? ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த பரபரப்பு காட்சி..! விடாமல் துரத்தும் தோஷம்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுக்கி விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. துர்காப்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்றிருந்த மம்தா பானர்ஜி, பிரசாரத்தை முடித்துக் கொண்டு அசன்சோல் செல்வதற்காக துர்காப்பூரில் இருந்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஹெலிகாப்டரில் ஏறியதும் தன்னுடைய இருக்கையில் அமர்வதற்காக முயன்ற போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக உதவியாளர்கள் மம்தா பானர்ஜிக்கு உதவி செய்து அவரை இருக்கையில் அமர வைத்தனர். இதில் மும்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், திட்டமிட்டபடி மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com