Mamata vs BJP | மம்தாவுக்கு எதிராக பாஜக நிறுத்திய `வேட்பாளர்’ - தேசிய அரசியலே ஸ்டன்னான மொமென்ட்
மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரியை நிறுத்திய பாஜக மேற்கு வங்கத்தில் 144 வேட்பாளர்களைக் கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக மீண்டும் வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரியை களமிறக்க பாஜக முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக இம்முறை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் தற்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பாபானிபூரில் பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது. இம்முறை தனது கோட்டையாக கருதப்படும் நந்திகிராம் மற்றும் பாபானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், மம்தா பானர்ஜி பாபானிபூரில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராக தேர்வாகிய போதும், நந்திகிராமில் சுவேந்து அதிகாரி அவரை 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மம்தா பானர்ஜியின் பாபானிபூர் தொகுதியின் பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகாததால் மீண்டும் 2021 ஆம் ஆண்டை நினைவூட்டும் வகையில் அமைய இருக்கிறதா , மேற்குவங்க தேர்தல் களம் ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
