Mamata | ``என்னோட அரசியல் வாழ்க்கையில இப்படி நான் பார்த்ததே இல்ல’’ - நெருப்பாய் கொதித்த மம்தா
Mamata | ``என்னோட அரசியல் வாழ்க்கையில இப்படி நான் பார்த்ததே இல்ல’’ - நெருப்பாய் கொதித்த மம்தா "இவ்வளவு ஆணவம் கொண்ட தேர்தல் ஆணையரை பார்த்ததில்லை" - மம்தா இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்ளும், இவ்வளவு பொய் பேசக்கூடிய ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லைஎன்று தலைமைத் தேர்தல் ஆணையருடனான சந்திப்புக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். நீண்ட நாள் டெல்லி அரசியலில் ஈடுபட்டு நான்கு முறை மத்திய அமைச்சராகவும் ஏழு முறை எம்பியாகவும் தாம் இருந்துள்ள நிலையில், இதுவரை இப்படி ஒரு தேர்தல் ஆணையரை நான் பார்த்ததில்லை என்றும் அவர் தங்களை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், மேற்குவங்கம் ஏன் குறிவைக்கப்படுகிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் தம்முடன் இங்கு உயிருடன் நிற்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்."
