Mamata | Election2026 | கடைசி நிமிடத்தில் சர்ப்ரைஸ் அறிவிப்பு | எதிர்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த மம்தா
Mamata | Election2026 | கடைசி நிமிடத்தில் சர்ப்ரைஸ் அறிவிப்பு | எதிர்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த மம்தா
மம்தாவின் அறிவிப்பு - கொந்தளித்த பாஜக மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை அகவிலைப்படி தொகையை வரும் மார்ச் மாதம் முதல் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதோடு, அவர் கோயில் மற்றும் மசூதிகளில் மத வழிபாட்டு பணிகளை மேற்கொள்ளும் பூஜாரிகள் மற்றும் மியூஸின்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் மாதாந்திர தொகையை 500 ரூபாய் அதிகரித்து, 2000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு மம்தா பானர்ஜி வெளியிட்ட இந்த அறிவிப்பை கடைசி நிமிட தேர்தல் தந்திரம் என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
