Mamata Banaerjee Speech | மம்தா என்ன பேசினார்? - வெடித்து சிதறும் அரசியல் களம்

x

மம்தா பானர்ஜி பேச்சால் அரசியலில் சர்ச்சை

மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, கல்லூரிகள் இரவில் மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருந்தார். அதற்கு, மாணவிகள் புர்கா அணிந்து கொண்டு வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டுமா என மத்திய இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, தனது கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளதாக மம்தா பானர்ஜி விளக்கம் கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்