Mallikarjun Kharge | 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம் - கொந்தளித்த கார்கே

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றம் செய்திருப்பது BJP-RSS அமைப்பின் திட்டமிட்ட சதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மகாத்மா காந்தியின் பெயரால் ஏழைகள் உரிமைகள் பெறுவதை எரிச்சலடைந்து மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறினார். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான திமிர் பிடித்த மத்திய அரசை எதிர்க்க காங்கிரஸ் ஒரு போதும் தயங்காது எனவும் கார்கே கூறினார். நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இந்த பிரச்னையை எடுத்து செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com