மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம், பாஜக மறைமுகமாக அதிகாரத்தில் தொடர்வதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' குற்றம் சாட்டியுள்ளது. ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றவில்லை என்றும், மகாராஷ்டிராவின் அரசியலை அறிய முடியாத சக்தி கட்டுப்படுத்துபோல உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது,