மஹாராஷ்டிராவில் 3 கட்சிகள் இறுதிக்கட்ட ஆலோசனை

மஹாராஷ்டிரா அரசியலில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த மெகா இழுபறி, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது.
மஹாராஷ்டிராவில் 3 கட்சிகள் இறுதிக்கட்ட ஆலோசனை
Published on

சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர். மஹாராஷ்டிராவில், சிவசேனா மூத்த தலைவர்கள் சஞ்சய் ராவத் மற்றும் அரவிந்த் சவந்த் ஆகிய இருவரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இந்த சூழலில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், 5 ஆண்டுகளும், சிவசேனாவை சேர்ந்த ஒருவரே, முதலமைச்சர் ஆக இருப்பார் என்றார். தனக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க, சரத்பவார் சிபாரிசு செய்ததாக வெளிவந்த செய்தி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இதில் எந்த உண்மையும் இல்லை என்று சஞ்சய் ராவத் திட்டவட்டமாக மறுத்தார். மஹாராஷ்டிரா மக்களை பொறுத்தவரை, உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே விருப்பம் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். இதனிடையே, மஹாராஷ்டிராவில் புதிய ஆட்சி, அநேகமாக ஞாயிறு அல்லது திங்கட்கிழமை மலரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com