

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார். மஹாராஷ்டிரா மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அயராது பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார்...