"சிவசேனாவை சேர்ந்தவர் அடுத்த முதலமைச்சர்" - சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தான் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
"சிவசேனாவை சேர்ந்தவர் அடுத்த முதலமைச்சர்" - சஞ்சய் ராவத்
Published on

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிராவின் முகம் மற்றும் அரசியல் தற்போது மாறி உள்ளதாகவும், பதட்டம் என்று விமர்சிக்கப்படுவது பதட்டம் அல்ல என்றும், உரிமை மற்றும் நீதிக்கான போராட்டம் அது என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் வெற்றி சிவசேனா உடையதாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை பொறுத்த மட்டில் மும்பையில் தான் முடிவு எடுக்கப்படும். அதனை உத்தவ் தாக்கரே எடுப்பார் என்று தெரிவித்த சஞ்சய் ராவத், சோனியா காந்தி, சரத்பவார் ஏதேனும் அறிக்கை விட்டுள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ஊகங்களை பரப்புவது இயற்கை என்றும், அதை வைத்து சிலர், பேசுவதும் இயல்பு தான் என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பான்மை உள்ள நிலையில் யாரும் ஆட்சி அமைப்பதை சிவசேனா தடுக்காது என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com