மகாராஷ்டிராவில் பாஜக அரசு தொடர்பாக பலத்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், அந்த மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தலைமை செயலகம் சென்று தனது பணிகளை இன்று கவனித்தார். இதுபோல, துணை முதலமைச்சர் அஜித் பவாரும், தலைமைச் செயலகத்துக்கு சென்று தனது பணிகளை தொடங்கினார்.