ADMK | மதுராந்தகம் இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பு

ADMK | Maduranthakam | By Election | மதுராந்தகம் இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பு

#Maduranthakam #admk #thanthitv

பொதுமக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் - கணிதா சம்பத் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் பொதுமக்களுக்கு சேவை செய்ய தான் காத்திருப்பதாக வாக்கு சேகரிப்பின் போது தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதிக்கு வருகின்ற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத் போட்டிருக்கிறார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட படாளம், பழையனூர், புலிப் புரகோவில், எல். என் புரம் ஆகிய பகுதிகளில் கணிதா சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது மக்கள் தேவையை பூர்த்தி செய்துள்ளதாகவும், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் பொதுமக்களுக்கு சேவை செய்ய தான் காத்திருப்பதாகவும் கூறினார். மேலும் தான் மதுராந்தகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது மக்கள் தன்னிடம் குறைகளை நேரடியாக கூறியுள்ளதாகவும், தான் எளிமையான முறையில் சராசரி மனிதரைப் போல் பழகக்கூடியவர் எனவும் கூறி, மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com