Maduranthakam | AIADMK | கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கணிதா சம்பத்
Maduranthakam | AIADMK | கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கணிதா சம்பத் #Maduranthakam #AIADMK #KanithaSampath மதுராந்தகத்தில் வீடு வீடாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், தனது மொபைல் எண்ணை கொடுத்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தது தொகுதி முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தொன்னாடு, மறுவளம், நெட்றம்பாக்கம், நீர்பெயர், நீலமங்கலம் மற்றும் மேல்வசலை உள்ளிட்ட கிராமங்களில் அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களிடையே பேசிய அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், "உங்கள் ஊரில் என்ன குறைகள் இருந்தாலும் மனு கொடுக்கவோ அல்லது நேரில் தேடி வரவோ தேவையில்லை என்றும் தனது தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம்“ என்றும் உறுதியளித்தார். மேலும் 24 மணி நேரமும் மக்களுக்காகப் பணி செய்ய காத்திருப்பதாக கூறிய அவர், எப்போது அழைத்தாலும் உடனடியாகத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். வேட்பாளரின் இந்த எளிய அணுகுமுறை கிராமப் பகுதி வாக்காளர்கள்ளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
