Madurai | "படிச்சவங்க, திறமையானவங்க அரசியலுக்கு வாங்க.." | TVK-ல் இணைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

x

வீட்டில் தேசிய கொடி, தவெக கொடியை சேர்த்து ஏற்றிய முன்னாள் ராணுவ வீரர்

மதுரையில், தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டில் தேசிய கொடியுடன் தவெக கொடியையும் ஏற்றி அழகு பார்த்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் 21 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் பா. சுரேஷ், சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியுடன் தமிழக வெற்றிக் கழகக் கொடியையும் ஏற்றியுள்ளார்.

முன்னதாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய கர்னல் சுரேஷ், இளைஞர்கள் தேசப்பற்றுடன் அரசியலில் பங்கெடுத்து சமூகக் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்