முன்னாள் அமைச்சரின் நில மோசடி வழக்கு.. அதிரடி காட்டும் சிபிசிஐடி |

நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த மோசடி வழக்கில், சுமார் ஐம்பது லட்ச ரூபாய் பணம், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, திண்டுக்கல் நேருஜிநகர் மற்றும் தடிக்கொம்பு பகுதியில் உள்ள டிரேடர்ஸ் நிறுவனங்களிலும், லந்தக்கோட்டை அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லிலும் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com