உணவகத்தில் புரோட்டா அடித்து அசத்திய - அதிமுக வேட்பாளர் ராணி

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராணி உணவகத்தில் புரோட்டா அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி கடந்த ஒரு வாரமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மாமூட்டுகடை சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள், உணவகங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்ற அவர் அங்கு சமையலர்களுக்கு உதவியாக புரேட்டாவை அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து, பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்களிடம் ஆதரவு திரட்டினார்

X

Thanthi TV
www.thanthitv.com