பா.ஜ.க தலைவர்கள் கைது - எல்.முருகன் கடும் கண்டனம் | Central Minister L Murugan | BJP | Mudurai
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட முயன்ற இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை இழந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க நடத்தும் அரசியல் நாடகங்கள் அனைத்தும் அம்பலப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என விமர்சித்துள்ளார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரையில் அண்ணா நினைவு தின பேரணி சென்ற அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் தடுக்கப்படாதது ஏன் எனவும் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story