"3-வது மொழியாக இந்தி கட்டாயமில்லை" - எல்.முருகன் பரபரப்பு பேட்டி

x

"3-வது மொழியாக இந்தி கட்டாயமில்லை" - எல்.முருகன் பரபரப்பு பேட்டி

மாணவர்களின் கல்வியில் முதலமைச்சர் விளையாடாமல் இருக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தேசிய கல்விக் கொள்கையில், மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என சொல்லவில்லை என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் அரசியல் விளையாட்டால் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாணவர்களின் கல்வியில் விளையாடாமல் முதலமைச்சர் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்