Annamalai | "காங். தலைவர் பொறுப்பை விட்டுட்டு தவெகவில் வந்து ஜாயின் பணிக்கட்டும்.." - அண்ணாமலை
"காங். தலைவர் பொறுப்பை விட்டுட்டு தவெகவில் வந்து ஜாயின் பணிக்கட்டும்.." - பெயரை சொல்லி அடித்த அண்ணாமலை #annamalai #congress #ManickamTagore #thanthitv தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், தனது கட்சிப் பொறுப்பிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மாணிக்கம் தாகூர் ஒரு கருத்தைக் கூறினால், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை அதற்கு உடனடியாக எதிர்க்கருத்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகப் பேசி வரும் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதைத் தவிர்த்து, அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து கருத்து தெரிவிக்க வேண்டும் என அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் முருக வழிபாடு குறித்து முருக பக்தர்களுக்குக் காங்கிரஸ் கட்சி பாடம் எடுக்க வேண்டாம் எனவும் விமர்சித்தார்.
