"சட்ட ஒழுங்கை இந்த அரசு எப்படி பாதுகாக்கும்?" | ஆவேசமாக கேட்ட எதிர்க்கட்சி தலைவர் EPS

x

சட்டம் ஒழுங்கு பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சரியான நடவடிக்கை எடுக்காததால் சட்டம் ஒழுங்கு குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்