எம்பியாக கடைசி நாள்.. திட்டவட்டமாக சொன்ன வார்த்தை - அதிரவிட்ட வைகோ
தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் காலுன்ற முடியாது என வைகோ கருத்து
எவ்வளவு வாரி இறைத்தாலும், தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் காலூன்ற முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோவின் எம்பி பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையொட்டி, நாடாளுமன்றத்தில் வைகோ நிறைவு உரையாற்றினார். அதன் பிறகு, விமானம் மூலம் சென்னை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திமுக கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, 'திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக' அவர் பதிலளித்தார்.
Next Story
