வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி

மதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது, ஜனநாயகத்தை அழிக்கும் வேலை என கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஜனநாயகத்தை அழிக்கும் வேலை - கே.எஸ்.அழகிரி
Published on
சிபிஐ உள்ளிட்ட துறைகளின் நம்பகத்தன்மையை மோடி அரசு கேள்விக்குறியாக்கி விட்டதாக காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது, ஜனநாயகத்தை அழிக்கும் வேலை என குற்றம் சாட்டினார். பா.ஜ.க. ஆட்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சிபிஐ, ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை என அனைத்து துறைகள் மீதும் நம்பகமற்ற தன்மையை மோடி உருவாக்கிவிட்டதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com