திமுக, அதிமுகவினர் உச்சகட்ட மோதல் - கல்லை தூக்கி அடிக்க பாய்ந்த பகீர் காட்சி

x

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கோடியே 41 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்ற நிலையில், முதல்வர், ஆட்சியர் உள்ளிட்டோரின் படங்களை புறக்கணித்ததாக கூறி திமுகவினர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், இருதரப்பும் கற்கலால் தாக்கி கொள்ளும் அளவிற்கு சென்ற நிலையில், போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்