முதல்வருக்கு சர்ப்ரைஸ் அளித்த ராகுல் காந்தி இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல் காந்தி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் சிங்காநல்லூரிலுள்ள ஸ்வீட் கடை ஒன்றின் அருகே தனது காரை நிறுத்தி இனிப்பு வகைகளை வாங்கினார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பிச்சென்றார். மேலும், தான் வாங்கிய இனிப்பை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொடுத்து தன் அன்பை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்