Kovai | MLA | Election | ஒரே கிராமம்… இரண்டு MLA... - கோவையில் வினோத தேர்தல் களம்

ஒரே கிராமம்… இரண்டு MLA... - கோவையில் வினோத தேர்தல் களம்

Kovai | MLA | Election | ஒரே கிராமம்… இரண்டு MLA... - கோவையில் வினோத தேர்தல் களம் #Coimbatore #TNElection #Sulur கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பொன்னாண்டாம்பாளையம் கிராமம், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கவனம் ஈர்த்துள்ளது. காரணம் ஒரே கிராமமாக இருந்தாலும், பல உள்ளாட்சி எல்லைகளில் பிரிந்துள்ளதால், இரண்டு வேறு தொகுதிகளில் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கே பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவலம் இருப்பதால், ஒரே ஊராட்சிக்குள் இணைக்க கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். எனவே தங்கள் கிராமம் முழுவதையும் கணியூர் ஊராட்சி, மற்றும் சூலூர் தொகுதிக்கு கீழ் கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com