Gudalur | ADMK | கூடலூர் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலனுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு
Gudalur | ADMK | TN Election 2026 | கூடலூர் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலனுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு #Gudalur #ADMK #TNelection2026 #thanthitv அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலனுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் நந்தெட்டி பகுதியில் முருகன் கோயிலுக்கு சென்ற, கூடலூர் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலனுக்கு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூடலூர் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள பொன் ஜெயசீலன், வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் நந்தெட்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் செண்டை மேளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மசனகுடி மசினி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பரிவட்டம் கட்டிச் சிறப்பான மரியாதையும் செய்யப்பட்டது.
