உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டேன் - ஸ்டாலின், திமுக தலைவர்

நிவாரண பொருட்கள் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.
உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டேன் - ஸ்டாலின், திமுக தலைவர்
Published on

சென்னை கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கினார். ரெட்டேரி சந்திப்பில் நடந்த நிகழ்வில், சுமார் 500 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிவாரண பொருட்கள் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், உடற்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுத்ததாகவும் கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com