சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு.. மதுரை தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை

x

சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு.. மதுரை தொழிலதிபரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு பங்களாவில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் சிஐடி நகரில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிஐடி நகரில் 5 முக்கிய தொழிலதிபர்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளன.

அந்த தொழிலதிபர்களை தனித்தனியாக அழைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார். அதேபோல் ஆந்திராவைச் சேர்ந்த சிலருக்கும் தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜரான 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது


Next Story

மேலும் செய்திகள்