keralam Nurses|Rahul Gandhi | கேரளம் செவிலியர்கள் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
கேரளம் செவிலியர்கள் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
கேரளம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரளம் செவிலியர்களின் அர்ப்பணிப்பு குறித்து ராகுல் காந்தி பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறைக்குள் வந்த கேரள செவிலியர் தனது தாயை பரிசோதித்து ஆறுதல் தெரிவித்து வந்ததாக கூறியுள்ளார். இவரைப்போல் இரவு முழுவதும் உறங்காமல் விழித்து பல நோயாளிகளுக்கு ஆறுதலாக இருக்கும் செவிலியர்கள் ஏராளம் என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதுதான் கேரளாவின் ஆன்மா என்று புகழ்ந்துள்ளார்.
