

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமைலான அம்மாநில அரசு மீது , சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அவையில் நேற்று காலை தொடங்கி இரவு வரை 10 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன் மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேசினார். அப்போது சபை நடுவே திரண்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கேரள அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் விளக்கம் - காங். உறுப்பினர்கள் முழக்கம்
பின்னர் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் 40 பேர் வாக்களித்தனர். ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாக கூட்டணி உறுப்பினர்கள் 87 பேர் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.