"கருப்பாக இருப்பதால் இன்னல்களை எதிர்கொண்டேன்" கேரள தலைமைச் செயலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

கருப்பாக இருப்பதால், தான் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக, கேரள மாநில தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகியுள்ளது. அந்த பதிவில், தனது கணவர் எந்த அளவுக்கு வெள்ளையாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு, தாம் கருப்பாக இருப்பதாக கூறி தன்னை பலர் விமர்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். தாம் கருப்பாக இருப்பதால், சிறுவயது முதல், தன்னை பெரிய ஆளாக எண்ணியதில்லை என குறிப்பிட்டுள்ள அவர், கருப்பு நிறமும் அழகுதான் என்பதை தனது குழந்தைகள்தான் தனக்கு புரிய வைத்ததாக தெரிவித்தார். கருப்பு என்பது மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்