``இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி'' - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

x

உச்சநீதிமன்ற தீர்ப்பு, சட்டமன்ற அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்கிற்கு எதிரான எச்சரிக்கை என கேரள முதலவர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்ற ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்தும் வகையில் தீர்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதை சுட்டி காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு எதிராக கேரள அரசு சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்