

கேரளாவில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் ஒரு தொகுதியை காங்கிரஸ் கூட்டணியான முஸ்லிம் லீக்கும் கைப்பற்றியுள்ளன. அரூர், எர்ணாகுளம் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மஞ்சேஸ்வரம் தொகுதியை காங்கிரசின் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கைப்பற்றியுள்ளது. இதுபோல, வட்டியூர் காவு, கோணி ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது.