Karur TVK Stampede |Vijay | Supreme Court | உச்சநீதிமன்றத்தில் மொத்த சீனையும் தலைகீழாக மாற்றிய விஜய்

x

கரூர் காவல்துறையின் வழிகாட்டுதல்கள், மற்றும் உத்தரவின் அடிப்படையிலேயே தவெக தலைவர் விஜயும், மூத்த தலைவர்களும் சம்பவ இடத்திலிருந்து புறப்படு சென்றதாகவும், சம்பவ இடத்திலிருந்து ஓடும் நோக்கமோ, தொண்டர்களைக் கைவிடும் நோக்கமோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்சியின் துணை பொதுச் செயலாளரை சம்பவத்தன்று தொடர்பு கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணி்பாளர், தவெக தலைவர்களைச் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக புறப்பட்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதனால் பொது ஒழுங்கை காக்கும் நோக்கில் தவெக தலைவர் விஜய் பேச்சை முடித்துக் கொண்டு, மூத்த தலைவர்களுடன் புறப்பட்டதாகவும், அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர்பலி நிகழ்ந்தது குறித்து அறியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் சம்பவ இடத்திலிருந்த தொண்டர்களை கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தபோது, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்ததால், தவெக தொண்டர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவ முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துகள் தவெக தலைவர், கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது தவறான அபிப்பிராயத்தை உருவாக்கியுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்