Karur Stampede Case Judgement | சாதகமாக வந்த தீர்ப்பு - மறுநொடியே விஜய் எடுத்த அதிரடி முடிவு

x

கரூர் துயர சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிடிஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சந்தித்து பேசினர். 2 மணி நேரம் நடந்த ஆலோசனையில், தவெகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், விஜய் கரூர் செல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் பேட்டி அளித்த சிடிஆர் நிர்மல் குமாரிடம், தங்களுக்குத் தெரியாமல் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுவது குறித்து கேட்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியால் 4 பேரை மிரட்டி பிறழ் சாட்சி சொல்ல வைக்க முடியாதா என்று அவர் பதில் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்