கிடைத்தது ஜாமின்... கூடவே வந்த சிக்கல்... MRVக்கு அடுத்த ஷாக் | MRV

கரூரில் அனுமதி இன்றி கூட்டத்தை கூட்டி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 450 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்... நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைதாகி ஜாமினில் வெளிவந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 400க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனுமதி இன்றி கூட்டத்தைக் கூட்டி, போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், உட்பட 450 பேர் மீது கரூர் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com