நள்ளிரவில் 100 பேரை திரட்டி MR விஜயபாஸ்கர் ஆவேசம்
"அதிமுககாரன்னா இளிச்சவாய்த்தனமா போச்சு" - நள்ளிரவில் 100 பேரை திரட்டி MR விஜயபாஸ்கர் ஆவேசம்
கரூரில், அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இரவில் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாந்தோணி மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை துணை தலைவரான அருள் தனது வீட்டின் அருகே கிராவல் மண்ணை கொட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்குவந்த ஊராட்சி செயலாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தொலைபேசியில் பேசிய போது, அருள் தகாத வார்த்தையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருளை போலீசார் கைது செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கரூர் நகர காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அருள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
