"கருணாநிதி பிறந்தநாள் - செம்மொழி நாளாக கொண்டாடப்படும்" - அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
நடப்பாண்டு முதல் கருணாநிதி பிறந்தநாள், செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். தமிழ் வளர்ச்சி துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்று தெரிவித்தார். தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story