காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பேச்சைத் தொடர்ந்து தாம் பதவி விலகத் தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி ஆட்சி நடந்து வரும் கர்நாடகாவில் சித்தராமையா தான் தங்கள் முதலமைச்சர் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேசி வந்தனர். இதனிடையே, தற்போதைய அரசு எதையும் செய்யவில்லை என முதலமைச்சர் குமாரசாமி மேடையில் இருக்கும்போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோமசேகர் விமர்சித்தார். இது குறித்து பேசிய குமாரசாமி தாம் பதவி விலக தயார் என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்துகொள்ளட்டும் என்றும் கூறினார்.