தண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி

தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.
தண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி
Published on

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து ஐந்து சதவிகிதம் கூட இல்லை என்றும், இந்நிலையில் அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் என்றும் கூறினார். இதை காவிரி மேலாண்மை ஆணையத்தில் உறுதிபட தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அரசியல் காரணங்களுக்காகவும், தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com