

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் போட்டியிடும் தான், நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு மீது ஏராளமான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பலர் பாஜக தலைமையுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறினார்.இன்னும் இரண்டு நாட்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.