தும்கூரு தொகுதியில் போட்டியிட்ட தேவகெளட தோல்வி அடைந்ததால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். கட்சி தொண்டர்கள் உற்சாகம் பெற வேண்டும் என்றால் தேவகௌடா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறிய அவர் கட்சி தொண்டர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தனது முடிவினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.