Karnataka Elephant | Viral Video | அசால்ட்டாக வந்த சுற்றுலா பயணிகளை திரும்பி ஓட விட்ட காட்டு யானை
கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை வனத்துறையினர் சஃபாரி வாகனத்தில் அழைத்துச்சென்ற போது, திடீரென காட்டுயானை ஒன்று சஃபாரி வாகனத்தை வழிமறித்து விரட்டியது. அந்த வாகன ஓட்டுனர் சாதுரியமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி செலுத்தினார். இருப்பினும் யானை சுமார் 300 மீட்டர் தூரம் சபாரி வாகனத்தை துரத்தியது. இந்த காட்சி சுற்றுலாப்பயணி ஒருவரின் செல்போனில் பதிவாகியுள்ளது.
