Karnataka CM | ``கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம்?’’ மல்லிகார்ஜுன கார்கே உச்சரித்த அந்த வார்த்தை
- "எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும்"- கார்கேவின் கருத்தால் சலசலப்பு
- கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கர்கே, எல்லாவற்றையும் தலைமை பார்த்துக் கொள்ளும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள முதல்வர் பதவி விவகாரம் குறித்து, மல்லிகார்ஜுன கார்கே தனது கருத்தை தெரிவித்தார். அப்போது, எந்த விவகாரம் குறித்தும் தாம் பேசுவது சரியாக இருக்காது என்றும், எதைச் செய்ய வேண்டுமோ அதை தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். அவருடைய இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
