கர்நாடகாவில் இன்று 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

கர்நாடகாவில் இன்று,15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. இடைத்
கர்நாடகாவில் இன்று 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
Published on
கர்நாடகாவில் இன்று,15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு துவங்கியது. இடைத் தேர்தல் களத்தில் மொத்தம்165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி உள்ளிட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இவர்களில் 13 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த 15 தொகுதிகளில் குறைந்தது, 8 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தப்பும் என கர்நாடக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com