மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காகவே மைனாரிட்டிகளை காயப்படுத்த வேண்டும் என அர்த்தமல்ல என திமுக எம்பி கனிமொழி மக்களவையில் தெரிவித்துள்ளார். ஆங்கிலோ இந்திய நியமன பதவிகளை நீக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மீது உரையாற்றிய அவர், இந்தியாவில் சுமார் 3 லட்சம் ஆங்கிலோ இந்தியன் சமூக மக்கள் இருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர், வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். நாட்டுக்காக ஆங்கிலோ இந்தியன் மக்கள் அளித்த பங்களிப்பை மறந்து விடமுடியாது என்றும் கனிமொழி கூறினார்.