Kanimozhi Santhosh MLA | கோவை - 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
Kanimozhi Santhosh MLA | கோவை - 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா #BabyShower #KanimozhiSanthoshMLA #TVK கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சார்பில், வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சீர்வரிசைகளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்புரையாற்றிய தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், "வளைகாப்பு என்பது பெண்களுக்கான நிகழ்வு மட்டுமல்ல; கர்ப்ப காலத்தில் தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கவனிக்கும் மிகப்பெரிய பொறுப்பு, கணவன் மற்றும் குடும்பத்தினருக்கும் உள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், மனைவியைத் தாலாட்டி அன்போடு கவனித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமூக நலனுக்கும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுடனும் தமிழ்நாடு அரசும், மக்கள் முதல்வர் விஜய்யும் எப்போதும் துணையாக நிற்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களின் குடும்பத்தினர் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
