ஸ்பெயின் பறக்கும் முன் கனிமொழி பரபர பேட்டி
ஸ்பெயின் செல்லும் முன் கனிமொழி பேட்டி
திமுக எம்.பி. கனிமொழி, நாட்டைப் பற்றி அனைவருக்கும் அக்கறை உண்டு. நாடு என்று வரும்போது யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இல்லை என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பாடம் புகட்டிய 'ஆப்ரேஷன் சிந்தூர்' குறித்து வெளிநாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டவும், பாகிஸ்தானின் அவதூறு பிரச்சாரங்களை முறியடிக்கவும் மத்திய அரசு அமைத்த திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு, ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு சென்றது. அப்போது புறப்படுவதற்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, சர்வதேச அளவில் நாம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற நிலைப்பாட்டை என்பதை எடுத்து உரைக்க உள்ளோம் என கூறினார்.
Next Story
