"பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" - கனிமொழி கடும் விமர்சனம்

x

"பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" - கனிமொழி கடும் விமர்சனம்

குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரின் மொழி குறித்த பேச்சை, திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். டெல்லியில் நடந்த 98-வது அகில இந்திய மராத்திய மாநாட்டில் உரையாற்றிய ஜெகதீப் தன்கர், ஒரு நிலத்தை கைப்பற்ற அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என்றும், நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் இதைத்தான் செய்தார்கள் என்றும் பேசியிருந்தார். இவரது பேச்சை மேற்கோள் காட்டி, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என எக்ஸ் தளத்தில் கனிமொழி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்